துருக்கி பூகம்பம்; 6 வயது சிறுமி மீட்பு; ஹீரோக்காளான ஐந்தறிவு ஜீவன்கள் !
துருக்கியில் பூகம்பத்தில் , ரோமியோ - ஜூலியட் மோப்ப நாய்கள், இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த 6 வயது சிறுமியை உயிரோடு மீட்க உதவியுள்ளன.
இடிபாடுகளுக்கு இடையே உயிரோடு சிக்கித் தவித்த சிறுமியை உரிய நேரத்தில் மீட்க உதவிய ரோமியோ - ஜூலியட் மோப்ப நாய்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளும் குவிந்துள்ளன.
மனிதர்கள் யாரும் உயிரோடு இருக்கிறார்களா என்பதை கண்டறிய உதவும் இயந்திரங்கள் கூட தோற்றுப்போகும் இடங்களில் இந்த மோப்ப நாய்கள் வெற்றியடைகின்றன.
இந்த நிலையில் மீட்புப் பணிக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் சென்றிருக்கும் ரோமியோ - ஜூலியட் உதவி இல்லாமல் போயிருந்தால், அந்த சிறுமியை உயிரோடு மீட்டிருக்க முடியாது என்கிறார்கள் நேரில் பார்த்தவர்கள்.