கனடா அமெரிக்க எல்லையில் பொலிசார்: பரபரப்பாகியுள்ள எல்லைப்பகுதி

Canada Mirror Canada
By Balamanuvelan Mar 28, 2023 08:32 AM GMT
Report

கனடா அமெரிக்க எல்லை பரபரப்படைந்துள்ள நிலையில், எல்லை கடக்க புலம்பெயர்வோர் பலர் பயன்படுத்தும் Roxham Road என்ற இடம் மூடப்பட்டது தெரியாமலே இன்னமும் பணம் செலவு செய்து அப்பகுதிக்கு வருகிறார்கள் புலம்பெயர்வோர்.

கனடா அமெரிக்க எல்லையில், கியூபெக்கிலுள்ள Hemmingford என்ற இடத்தில் வாழ்ந்துவருகிறார் ஈவ்லின் (Evelyne Bouchard).

அவர் வாழும் பகுதிக்கு அருகில்தான் Roxham Road அமைந்துள்ளது. திடீரென அப்பகுதிக்கு கனேடிய பொலிசார் வருவதைக் கவனிக்கிறார் ஈவ்லின்.

கனடா அமெரிக்க எல்லையில் பொலிசார்: பரபரப்பாகியுள்ள எல்லைப்பகுதி | Roxham Road Border Crackdown Painful Dramas

CBC

சிறிதுநேரத்தில், எல்லை கடந்து கனடாவுக்குள் நுழைய முயன்ற ஒரு குடும்பத்தைக் கைது செய்து அழைத்துச் செல்வதைக் கண்ட ஈவ்லின் திடுக்கிடுகிறார்.

இரண்டு பெரியவர்கள், இரண்டு குழந்தைகள், அவற்றில் ஒன்று சிறுகுழந்தை, பெற்றோரைக் கைது செய்து, அந்தக் குழந்தையை கைகளில் தூக்கிக்கொண்டு பொலிசார் செல்வதைப் பார்க்க, ஈவ்லினுக்கு மனம் என்னமோ செய்கிறது.

காரணம், அவர் பலர் அந்த பகுதி வழியாக எல்லை கடப்பதைப் பார்த்தவர்.

எல்லை கடந்து கனடாவுக்குள் வந்தவர்களுக்கு உதவும் அமைப்பு ஒன்றில் தன்னார்வலராகவும் இருந்துள்ளார் ஈவ்லின்.

ஆனால், இப்போது காட்சி மாறிவிட்டது. அமெரிக்காவும் கனடாவும் செய்துகொண்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இனி எல்லை கடப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

ஆக, முதன்முறையாக எல்லை கடந்து கனடாவுக்குள் நுழைந்த ஒரு சின்னஞ்சிறு குடும்பத்தை பொலிசார் கைது செய்து அழைத்துச் செல்லும் காட்சியைக் கண்ட ஈவ்லினால் நிம்மதியாக சாப்பிட முடியவில்லை.

என் குடும்பம் இங்கே மகிழ்ச்சியாக சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது, சற்று தொலைவில் ஒரு குடும்பம் கடினமான ஒரு சூழலுக்குல் பிரவேசிக்கிறது.

இந்த மாறுபாடான நிகழ்வைத் தன்னால் தாங்கமுடியவில்லை, மனம் கனக்கிறது என்கிறார் ஈவ்லி

கனடா அமெரிக்க எல்லையில் பொலிசார்: பரபரப்பாகியுள்ள எல்லைப்பகுதி | Roxham Road Border Crackdown Painful Dramas

Charles Contant/CBC

இது ஒருவகையில் வெட்கத்துக்குரிய ஒரு செயல் என்கிறார் ஈவ்லின். நம் நாடு எவ்வளவு செல்வச் செழிப்பு மிக்க நாடு, இப்படித்தானா நம் நாட்டுக்குள் வருபவர்களை நாம் வரவேற்போம் என்று கேட்கும் ஈவ்லின், நாம் புகலிடம் கோர விரும்பும் மக்களுக்கு சரியான நடைமுறை எதையும் முறைப்படி செய்துகொடுக்காமல், மக்களை தங்கள் சின்னஞ்சிறு பிள்ளைகளுடன் காடுகளுக்குள் அபாயகரமான வகையில் நடக்க கட்டாயப்படுத்துகிறோம் என்கிறார்.

தங்கள் சூழ்நிலை காரணமாக புலம்பெயரும் அவர்கள், எப்படியும் எல்லை கடப்பதை நிறுத்தப்போவதில்லை என்று கூறும் ஈவ்லின், இந்த இடம் இல்லையென்றால், அவர்கள் வேறு வழியாக எல்லையைக் கடக்க முயற்சிக்கப் போகிறார்கள் என்கிறார்.

அதில் ஒரு அபாயம் உள்ளது என்று கூறும் ஈவ்லின், வரும் நாட்களில் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, கடத்தல்காரர்கள் பணம் பெற்றுக்கொண்டு, அபாயகரமான வகையில் புலம்பெயர்வோரை எல்லை கடக்கச் செய்ய முயற்சி செய்யலாம் என்கிறார். 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US