உச்சக்கட்ட தாக்குதலை நடத்திய ரஷ்யா! உயிரிழந்த 4 உக்ரைன் போராளிகள்
உக்ரைனிலிருந்து ரஷ்ய எல்லைக்குள் நுழைய முயன்ற 4 உக்ரைன் படையினர் ரஷ்ய துருப்புக்களின் தாக்குதல்களால் உயிரிழந்துள்ளனர்.
6 பேர் கொண்ட குழு ஒன்று தனது எல்லையை கடக்க முயன்றபோது உக்ரைன் உளவாளிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
இதற்கு முன்னர், உக்ரைன் போராளிகள் ரஷ்ய எல்லைக்குள் நுழைய முயன்றபோது, அதைத் தடுக்க ரஷ்ய துருப்புக்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதனிடையே, ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியைச் சேர்ந்த கிராமம் ஒன்று அதிலிருந்து விடுவிக்கப்பட்டதாக உக்ரைன் கூறுகிறது.
மேலும் உக்ரைன் ஆயுதப் படைகளின் தலைவர் நேற்று (16-08-2023) இதனை உறுதிப்படுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.