ரஷ்யா எண்ணெய் விவகாரம் ; இந்தியாவுக்கு அமெரிக்கா மீண்டும் அழுத்தமா?
'ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தவிர்த்து, வெனிசுலாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியா சம்மதித்துள்ளது' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டி ரம்ப் தெரிவித்துள்ளார்.
நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வந்தது. இந்த பணத்தை வைத்து உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா நடத்துவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.

ரஷ்யாவின் வருவாயை முடக்க அந்நாட்டிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு 50 முதல் 1 00 சதவீதம் வரை அமெரிக்கா வரி விதித்தது.
இதனால், கச்சா எண்ணெய் கொள்முதலை ஈரான் உள்ளி ட்ட நாடுகளுக்கு மத்திய அரசு பரவலாக்கிய து மத்திய அரசு. இதை, சமீபத்தில் பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியு ம் உறுதி செய்திருந்தார்.
இதற்கிடையே, தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்ததன் மூலம் அந்நாட்டை அமெரிக்கா நிர்வகிக்க துவங்கியுள்ளது.
குறிப்பாக எண்ணெய் வளங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் அதிபர் டிரம்ப் இறங்கி உள்ளார்.

'ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்துள்ளதால், அதற்குப் பதிலாக வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்க அனுமதி வழங்கப்படும்' என, அமெரிக்கா கூறியிருந்தது.
இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு பதிலாக, வெனிசுலா எண்ணெயை வாங்க இந்தியா தயாராக உள்ளது.
அதற்கு, ஏற்கனவே ஒப்புதல் தெரிவித்துவிட்டது. விரைவில் ஒப்பந்தம் இறுதியாகும். இந்த ஒப்பந்தத்தில் சீனா இணைய விரும்பினாலும் அமெரிக்கா வரவேற்கும். இவ்வாறு அவர் கூறினார்.