உறையவைக்கும் குளிர்... உணவு பற்றாக்குறை: புடினுக்கு எதிராக திரும்பும் துருப்புகள்
உக்ரைனில் உறையவைக்கும் குளிரில் தவிக்கும் ரஷ்ய ராணுவத்தினருக்கு உணவு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதால் ஜனாதிபதி புடினுக்கு எதிராக ராணுவத்தினர் திரும்பலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
உக்ரைனில் சிக்கியுள்ள ரஷ்ய வீரர் ஒருவர் பதிவு செய்துள்ள காணொளியில், கடும் குளிரை எதிர்கொள்வதாகவும், உணவு அல்லது மருத்துவ உதவி போதுமானதாக இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது -25C என குறிப்பிட்டுள்ள அந்த வீரர், இந்த சூழலில் நாங்கள் தங்க வேண்டியிருக்கிறது என்றார். மேலும், இந்த கட்டத்திலும் எங்களின் தலைமை எங்களை மிரட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
இந்த பகுதியில் இருந்து நகர்ந்து முன்னேறாதவரையில் உணவு அல்லது மருத்துவ உதவிகளை நம்ப வேண்டாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.
தாங்கள் பதிவு செய்துள்ள இந்த காணொளி ஜனாதிபதி புடின் பார்வைக்கு செல்ல வேண்டும் எனவும், அதற்கு ஒரு சட்டத்தரணி எங்கள் சார்பில் வேண்டும் எனவும் அவர் கூறுகிறார்.
இதுபோன்ற இரக்கமற்ற நடவடிக்கை ராணுவத்தின் மன வலிமையை சிதைக்கும் எனவும், வீரர்கள் கடும் குளிரில் சிக்கி நோய்வாய்ப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.