ரஷ்ய அதிபரின் ரகசிய காதலியின் மேல் பொருளாதார தடை விதிப்பு
ரஸ்ய அதிபர் புதினின் ரகசிய காதலியாக அறியப்படுபவர் அலினா கபெவா. ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையான அலினா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளதோடு , ரஸ்யாவின் அரசு செய்தி நிறுவனம் ஒன்றின் இயக்குனராகவும் அலினா செயல்பட்டு வந்துள்ளார்.
இதனிடையே, உக்ரைன் மீது போர் தொடுத்த ரஸ்யா மீது அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
ரஸ்ய அதிபர் புதின், ரஸ்ய ராணுவ தளபதிகள், தொழிலதிபர்கள், நிறுவனங்கள் என பல தரப்பின் மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.
இந்நிலையில் ரஸ்ய அதிபர் புதினின் ரகசிய காதலியாக அறியப்படும் அலினா கபெவா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளதுடன் கபெவா பாஸ்போர்ட்டை அமெரிக்கா முடக்கியுள்ளதுடன் அவரின் சொத்துக்களையும் முடக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.