கனடா தமிழர்களை சிறிலங்கா நாடாளுமன்றில் காட்டிக்கொடுத்த தமிழ் கல்விமான்? கடும் கோபத்தில் உலகத் தமிழர்கள்
வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுனரும், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், கல்விமானுமாகிய கலாநிதி சுரேன் ராகவன், சிறிலங்கா நாடாளுமன்றில் அண்மையில் ஆற்றியிருந்த உரை கனடா வாழ் தமிழ் மக்களின் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகி வருகின்றது.
கலாநிதி ராகவன் தனது நாடாளுமன்ற உரையின் மூலம் கனடா வாழ் தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளதாகவும், கனடா தமிழ் மக்களை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் காட்டிக்கொடுத்துவிட்டதாகவும், கனடா மக்கள் ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் பதிவு செய்து வருகின்றார்கள்.
இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப் படுகொலையே என்று வலியுத்தி கனடா ஒன்ராரியோ சட்டசபையில் தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம்’ தொடர்பான 104 என்ற சட்டமூலம் முன்மொழியப்பட்டிருந்தது.
இந்த சட்டமூலத்தைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி கலாநிதி சுரேன் ராகவன் சிறிலங்கா நாடாளுமன்றில் ஆற்றியிருந்த உரை தொடர்பாகவே கனடா வாழ் தமிழ் மக்கள் தமது கடும் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றார்கள்.