அமீரக ஆதரவு படைகள் மீது யேமனில் சவூதி தாக்குதல்

Saudi Arabia Yemen Ship
By Sahana Dec 30, 2025 11:24 PM GMT
Sahana

Sahana

Report

ஐக்கிய அமீர ஆதரவுடன் செயல்பட்டுவரும் யேமன் பிரிவினைவாதப் படையினரைக் குறிவைத்து அந்த நாட்டின் முகல்லா துறைமுக நகரில் சவூதி அரேபிய செவ்வாய்க்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இது குறித்து சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா துறைமுகத்தில் இருந்து வந்த கப்பல்கள் மூலம் தெற்கு இடைக்கால கவுன்சில் (எஸ்டிசி) பிரிவினைவாதப் படைகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் அனுப்பப்பட்டன.

அமீரக ஆதரவு படைகள் மீது யேமனில் சவூதி தாக்குதல் | Saudi Attack On Uae Backed Forces In Yemen

இந்த ஆயுதங்கள் யேமனின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உடனடி அச்சுறுத்தல் ஏற்படுத்துவதால், செவ்வாய்க்கிழமை காலை நேரத்தில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.

கப்பல்களில் இருந்து இறக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அநத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, யேமன் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக ஐக்கிய அரபு அமீரகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானவை என்று சவூதி அரேபியா முதல்முறையாக நேரடியாகக் குற்றஞ்சாட்டியது.

யேமனில் தலைநகா் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளை ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி பழங்குடியின படையினா் கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றினா். ஐ.நா. அங்கீகாரம் பெற்ற அரசுக்கு ஆதரவான படையினா் நாட்டின் தெற்குப் பகுதியை மட்டும் கட்டுப்படுத்திவருகின்றனா்.

இந்த உள்நாட்டுப் போரில் ஹூதி படையினருக்கு எதிராக சவூதி அரேபியா வான்வழித் தாக்குதல் நடத்திவந்தது.

ஹூதிக்களுக்கு எதிராக எஸ்டிசி, தேசிய கவசப் படைகள் உள்ளிட்டவை ஒன்றிணைந்து போரிட்டன. இதில் எஸ்டிசி-க்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு அளித்துவருகிறது.

சவூதி அரேபியாவோ தேசிய கவசப் படைகள் உள்ளிட்ட பிற ஆயுதக் குழுக்களை ஆதரிக்கிறது. இந்தச் சூழலில், தெற்கே அண்மைக் காலமாக முன்னேறிவந்த எஸ்டிசி படையினா் அரசுப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஹத்ரமவுத், மஹ்ரா மாகாணங்களை கைப்பற்றினா்.

அமீரக ஆதரவு படைகள் மீது யேமனில் சவூதி தாக்குதல் | Saudi Attack On Uae Backed Forces In Yemen

அந்த மாகாணங்களில் இருந்து அவா்கள் வெளியேற வேண்டும் என்று சவூதி அரேபியா கடந்த உத்தரவிட்டது. அதன் தொடா்ச்சியாக, எஸ்டிசி படையினரை எச்சரிக்கும் வகையில் ஹத்ரமவுத் மாகாணத்தில் சவூதி விமானங்கள் அந்தப் படையினா் மீது கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினா்.

இதனால் சவூதி அரேபியாவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. இந்தச் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த கப்பல்களில் இருந்த பொருள்களைக் குறிவைத்து சவூதி அரேபிய தற்போது நடத்தியுள்ள தாக்குதல் இந்தப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

தற்போது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்ட முகல்லா துறைமுக நகரமும் ஹத்ரமவுத் மாகாணத்தில்தான் உள்ளது. அரசுப் படையினா் கட்டுப்பாட்டில் உல்ள ஏடனுக்கு வடகிழக்கே 480 கிலோமீட்டா் தொலைவில் உள்ள இந்தத் துறைமுக நகரம் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது.

கடந்த 1967 முதல் 1990 வரை தெற்கு யேமன் தனி நாடாக இருந்தது. 1990-இல் யேமன் ஒருங்கிணைக்கப்பட்டது. இருந்தாலும், ஐக்கிய அரபு அமீரக ஆதரவுடன் எஸ்டிசி பிரிவினைவாதக் குழுவினா் தனி நாடு கோரி வருகின்றனா். இந்த விவகாரம் யேமன் உள்நாட்டுப் போரை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US