42 இந்தியர்களை பலிகொண்ட கோர விபத்து ; ஒருவர் மட்டும் உயிர்பிழைத்த அதிசயம்
சவுதி அரேபியாவில்பேருந்தும் ஒன்றும் டீசல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றும் நேருக்குநேர் மோதியதில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி 42 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
சவுதி அரேபியாவின் மதீனா அருகே, மக்காவிலிருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகளை ஏற்றிச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

20 பெண்கள், 11 சிறுவர்கள் உட்பட 42 இந்தியர்கள்
இந்தவிபத்தில் 20 பெண்கள், 11 சிறுவர்கள் உட்பட 42 இந்தியர்கள் உயிரிழந்தநிலையில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
24 வயதான முகமது அப்துல் சோயிப் என்ற இளைஞர் மட்டும் உயிர் பிழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞன் ஓட்டுநருக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து பயணித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.