எலான் மஸ்க்கை செவ்வாய் கிரகத்திற்கே அனுப்பி விடுங்கள்; அமெரிக்க மக்கள் போராட்டம்
தொடர் பிரச்சினைகள் காரணமாக அமெரிக்க மக்கள் பலர் ட்ரம்புக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். லாஸ் ஏஞ்சலஸ், மின்னசோட்டா உள்ளிட்ட பல மாகாணங்களில் ஒரே நாளில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ‘எலான் மஸ்க்கை செவ்வாய் கிரகத்திற்கே அனுப்பி விடுங்கள் உள்ளிட்ட கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.
அமெரிக்காவின் புதிய அதிபராக ட்ரம்ப் பதவியேற்றுள்ள நிலையில் புதிய அரசின் கெடுபிடிகளால் அமெரிக்க மக்கள் பலர் வீதிகளில் போராட்டத்தில் இறங்க தொடங்கியுள்ளனர்.
ட்ரம்ப் அமல்படுத்தி வரும் கடும் சட்டங்கள்
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் கடந்த சில வாரங்களாக அமல்படுத்தி வரும் கடும் சட்டங்களால் அமெரிக்கர் அல்லாதவர், அமெரிக்கர் என பலரும் படாதபாடு படுகின்றனர்.
உலக சுகாதார அமைப்பு, ஐநா சபை உள்ளிட்டவற்றிலிருந்து வெளியேறும் ஒப்புதலில் கையெழுத்திட்டதுடன், அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் செய்துள்ள வெளிநாட்டினரும் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்காவிலுமே ஆண், பெண் தவிர்த்த இதர பாலினங்கள் அங்கீகரிக்கப்படாது என்று அறிவித்ததுடன், அமெரிக்க ராணுவம், விளையாட்டு போன்றவற்றி மற்ற பாலினத்தாருக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ட்ரம்ப்பின் அரசியல் செயல்திறன் மேம்பாட்டு திறன் துறையின் தலைவராக உள்ள எலான் மஸ்க் பொருளாதார ரீதியாக மேற்கொண்டு வரும் கட்டுப்பாடுகளால் உலக நாடுகளுடனான வர்த்தகத்திலும் பெரும் மோதல் எழுந்துள்ளது.
இதனால் அமெரிக்காவில் விலைவாசி கூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற தொடர் பிரச்சினைகள் காரணமாக அமெரிக்க மக்கள் பலர் ட்ரம்புக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.
லாஸ் ஏஞ்சலஸ், மின்னசோட்டா உள்ளிட்ட பல மாகாணங்களில் ஒரே நாளில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் LGBTQ அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதில் ‘எலான் மஸ்க்கை செவ்வாய் கிரகத்திற்கே அனுப்பி விடுங்கள்” உள்ளிட்ட கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.