கனடாவின் பூங்கா ஒன்றில் மர்மப் பொருள்; நோய்வாய்ப்பட்ட நாய்கள்
கனடாவின் பூங்கா ஒன்றில் மர்மப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்த மர்மப் பொருட்கள் காரணமாக நாய்கள் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் இட்டாபிகொக்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக செல்லப் பிராணி உரிமையாளர்குள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது.
பூங்காவில் மர்மப்பொருள் இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் பொலிஸாரும், குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.
வெள்ளை அல்லது சாம்பள் நிற ஏதோ ஓர் பொருள் இவ்வாறு போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மர்மப் பொருட்களை ஸ்பரிசித்த நாய்கள் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் இருந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.