கனேடிய நகரில் சரமாரி துப்பாக்கிச் சூடு: அலைபேசி வழியாக மக்களுக்கு அவசர எச்சரிக்கை
கனடாவின் நகரில் சரமாரி துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் நகர மக்களுக்கு அலைபேசியில் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வான்கூவாரின் பெரு நகரங்களில் ஒன்றான மவுன்டீஸ் நகரில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
நகரின் பல இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் இதில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அலைபேசியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஒரு மணித்தியாலத்தின் பின்னர் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக மற்றுமொரு தகவலும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அவசர விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதகாவும், சில பகுதிகளுக்கு மக்கள் செல்லத் தடைவிதிக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.