ஷேக் ஹசீனா நாடு திரும்புவது தொடர்பில் மகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
பங்காளதேஷில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம், வன்முறையாக மாறியதில் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக நேற்றையதினம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் பங்காளதேஷில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், ஷேக் ஹசீனாவின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசத் ஜோய் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
புதிய அரசாங்கம் தேர்தலை நடத்த முடிவு செய்ததும், அம்மா (ஷேக் ஹசீனா) நாடு திரும்புவார். அவர் போட்டியிடுவாரா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. தற்போதைக்கு அம்மா இந்தியாவில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.