கனடாவில் வீடொன்றில் சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கனடாவில் உள்ள வீடொன்றில் இருந்து 52 கிராம் கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த 26ஆம் திகதி Yorkton நகரின் விவசாய அவென்யூவில் உள்ள வீட்டில் பொலிஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்போதே சுமார் 52 கிராம் கொக்கைன் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சுமார் 75 பாக்கெட்டுகளாக இந்த கொக்கைன் பிரித்து வைக்கபட்டறிந்ததாகவும் அதனோடு குறிப்பிட்ட அளவிலான பணத்தினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பாக எட்மண்டனை சேர்ந்த Acol Welid Agor Dau என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட Acol Welid Agor Dau மீது போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.