பாலஸ்தீன மேற்குகரையில் பேருந்தின் மீது துப்பாக்கி பிரயோகம்
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் மேற்குகரையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர்கொல்லப்பட்டுள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
பேருந்தொன்றின் மீது நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டார் என இஸ்ரேலிய மருத்துவதுறையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையை கடந்து செல்லும் முக்கிய கிழக்கு மேற்கு வீதிகளில் அமைந்துள்ள பண்டுக் என்ற பாலஸ்தீன கிராமத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
60 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் கடும்காயங்கள் காரணமாக உயிருக்காக போராடுகின்றனர் என டைம்ஸ் ஒவ் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதேசமயம் பொதுமக்கள் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தை இலக்குவைத்தே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.