அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு! ரத்த வெள்ளத்தில் நால்வர்
அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனின் வடகிழக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடப்பதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் பொலிஸார் உடனடியாக அங்கு விரைந்தனர். அப்போது அங்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வளாகத்தில் ஒருவர் துப்பாக்கி குண்டுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். 4 பேர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
பொலிஸார் உடனடியாக அவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் பொலிஸார் வருவதை அறிந்து அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் என்ன என்பது தெரியாத நிலையில் தப்பியோடிய நபரை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.