இங்கிலாந்தில் தனது ஆறு பிள்ளைகளைகளையும் மருத்துவ சேவைக்கு அர்ப்பணித்தவர் கொரோனாவுக்கு பலி
இங்கிலாந்தில் தனது ஆறு பிள்ளைகளைகளையும் மருத்துவ சேவைக்கு அர்ப்பணித்த ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1950களின்போது, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது அங்கிருந்து தப்பி இங்கிலாந்து சென்றவர் அசன்-உல்-ஹக் சவுத்ரி (81). இவர் கொரோனா தொற்று காரணமாக டிசம்பர் மாதம் 28ஆம் தேதி,இவர் கிழக்கு லண்டன் மருத்துவமனை ஒன்றிலேயே உயிரிழந்தார் .
சவுத்ரி ஒரு கணித மற்றும் கணினி அறிவியல் ஆசிரியராக பணி புரிந்து ஓய்வுபெற்றவர் ஆவார். இவர் 6 பிள்ளைகளும் மருத்துவர்களாக உள்ளனர்.
பிள்ளைகளில் ஒருவர் தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவராகவும், இரண்டு பேர் பொது மருத்துவர்களாகவும், ஒருவர் ஜூனியர் மருத்துவராகவும் ஒருவர் குழந்தைகள் நல மருத்துவராகவும், மற்றொருவர் மருந்தாளுநராகவும் உள்ளனர்.
இவர்கள் ஆறு பேரும் தங்கள் தந்தையுடன் செலவிடும் நேரத்தையும் தியாகம் செய்து, மருத்துவப்பணியில் முன்னணியில் களம் இறங்கி கொரோனாவுக்கெதிராக போராடி வந்தனர் .
இந்நிலையில், அரசின் விதிமுறைகளை சரியாக பின்பற்றி, தனிமையில் கிழக்கு லண்டனில் பாதுகாப்பான முறையில் இருந்தும், சவுத்ரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தனது மகள் பணிபுரியும் கிழக்கு லண்டன் மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்த சவுத்ரிக்கு இரங்கல் செய்திகள்