டொரொண்டோவில் பயண அறிவுறுத்தல்
டொரொண்டோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை குளிர்கால பயண ஆலோசனை அமலில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையாக குறையும் வெப்பநிலை காரணமாக வீதிகள் உறைந்து வழுக்கலாக மாறும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது.
வீதிகளில் தண்ணீர் உறையலாம், இதனால் வழுக்கல் நிலை உருவாகும். பெருநகர கோல்டன் ஹோர்ஸ்ஷூ பகுதிகளில் 70 கிமீ/மணிக்கு மற்றும் தெற்கு நயாகராவில் 80 கிமீ/மணிக்கு அதிகமான காற்று வீசும்," என தேசிய வானிலை நிறுவனத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன சாரதிகள் அபாயகரமான குளிர்காலப் போக்குவரத்து நிலையை எதிர்பார்த்து பயண திட்டங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
முக்கியச் சாலைகள், நடைபாதைகள் மற்றும் பார்க்கிங் பகுதிகள் உறைந்து வழுக்கலாக மாறும் வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் டொரொண்டோவில் சுமார் இரண்டு செ.மீ. பனிப்பொழிவு ஏற்படும்.
பிற்பகலில் வெப்பநிலை மறை 2 பாகை செல்சியஸாக ஆக குறையும், ஆனால் காற்றின் ஈரப்பதன் காரணமாக உணரும் வெப்பநிலை மறை 9 பாகை செல்சியஸாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு டர்ஹாம் பகுதிகளில் சில பாடசாலை பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.