ஒருவாரம் ஆகியும் தொடரும் சோகம்; உதவ ஆளின்றி தாயை பறிகொடுத்த மகன்
உலகை உலுக்கிய துருக்கி மற்றும் சிரியா பூகம்பம் ஏற்பட்டு ஒரு வாரம் கடந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 33 ஆயிரம் கடந்து உள்ளது. இந்நிலையில் தொடர்ந்தும் அங்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து வருகின்றன.
துருக்கியின் அன்டாகியா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் வசித்து வருபவர் ஜாபர் மகமுது பான்கக் (வயது 60). நிலநடுக்கத்தில் அடியோடு சரிந்த கட்டிடங்களில் இவர் வசித்து வந்த குடியிருப்பும் ஒன்று.
உதவுவதற்கு யாரும் இல்லை
இந்நிலையில் பூகம்பத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய தனது 75 வயது தாயை அவர் தேடி கண்டுபிடித்து அவரை காப்பாற்ற போராடி உள்ளார்.
பல மணிநேரம் உதவி கேட்டு அவர் கூக்குரலிட்டு உள்ளார். எனினும் கட்டிட இடிபாடுகளில் பலரும் சிக்கிய சூழலில், சாலைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில், உதவுவதற்கு யாரும் இல்லை.
வயது முதிர்ந்த நிலையில், இருவராலும் எதுவும் செய்ய முடியாதபோதும், தாயுடன் ஜாபர் பேச முடிந்து உள்ளது. தாயின் கையை பற்றி கொண்டார். அவருக்கு தண்ணீர் கொடுத்து உதவியுள்ளார்.
இந்நிலையில், பூகம்பம் ஏற்பட்டு ஒரு வாரம் போன நிலையில், உயிரிழந்த ஜாபர் மகமுதுவின் தாயின் உடல் ஞாயிற்று கிழமை மீட்கப்பட்டு உள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ஜாபர்,
இது உங்களுடைய சொந்த தாயாராக இருந்தால் என்ன நடந்திருக்கும் அருமை எர்டோகன் அவர்களே? இதுவே உலக தலைவராக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? நீங்கள் எங்கே போனீர்கள்? என ஆவேசமுடன் கேட்டுள்ளார்.
ஜாபர் தனது தாயாருக்கு குடிக்க நீர் கொடுத்து, முகத்தில் காணப்பட்ட கட்டிட தூசுகளை துடைத்து விட்டு உள்ளார். உங்களை காப்பாற்றுவேன் என கூறியுள்ளார். ஆனால், அது தோல்வியடைந்து உள்ளமை சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.