இங்கிலாந்து அணியை சொற்ப ஓட்டங்களில் வீழ்த்தி அபார வெற்றியை ஈட்டிய தென் ஆப்பிரிக்கா!
இவ்வாண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி, 229 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்று முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 399 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ஹென்ரிச் கிளாசென் அதிகபடியாக 109 ஓட்டங்களையும், ரீசா ஹென்ட்ரிக்ஸ் 85 ஓட்டங்களையும், ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸென் 60 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அத்துடன் மார்கோ ஜான்சன் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ரீஸ் டோப்லி 3 விக்கெட்டுக்களையும், கஸ் அட்கின்சன் ,அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதன்படி 400 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 22 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 170 ஓட்டங்கள் மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் மார்க் வூட் அதிகபட்சமாக 43 ஓட்டங்களையும், கஸ் அட்கின்சன் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுக்களையும் லுங்கி என்கிடி , மார்கோ ஜான்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.