கல்கரி படகு விபத்தில் ஒருவர் பலி; இருவரை காணவில்லை
கனடாவின் கல்கரி மாகாணத்தில் இடம்பெற்ற படகு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காணாமல் போய் உள்ளனர்.
கல்கரியின் கான்மோர் பகுதிக்கு அருகாமையில் உள்ள ஸ்பிரே லேக்ஸ் வாவியில் இந்த படகு விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்தப் படகில் நான்கு பேர் பயணித்துள்ளதாக கான்மோர் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான போது அதில் பயணித்த ஒருவர் மட்டும் நீந்தி கரையை அடைந்துள்ளார்.
மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய இருவர் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்க பெறவில்லை.
காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .
இந்த படகு விபத்துக்கு உள்ளானவர்கள் பற்றிய விபரங்கள் எதனையும் பொலிசார் இதுவரையில் வெளியிடவில்லை.
தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் காரணத்தினால் அந்தப் பகுதிக்கு வருவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.