கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இலங்கையர்கள் பலி!

Sulokshi
Report this article
கனடாவில் கோர விபத்தில் சிக்கி இலங்கை குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கனடா மில்டன், பிரேடானியா வீதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இலங்கையர்கள் உ யிரிழந்துள்ளனர். 28 வயதுடைய கனடிய இளைஞர் ஓட்டிய கெடிலெக் எனப்படும் வாகனத்தில் இலங்கையர்கள் ஓட்டி சென்ற வாகனம் மோதி இவ்வாறு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த அத்துல கருணானந்த என்பவரே இந்த வாகனத்தை ஓட்டிச் சென்றதுடன் . அதில் அவரது மனைவியும் மகளும் பயணித்துள்ளனர். இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய கனேடிய இளைஞன் குடிபோதையில் இருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையர்கள் ஓட்டிச் சென்ற வாகனத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த மகள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். விபத்திற்கு காரணமாக இருந்த 28 வயதுடைய இளைஞன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த அத்துல கருணானந்த என்பவர் சில வருடங்களுக்கு முன்னர் நாவல ராஜகிரியவில் இருந்து கனடாவுக்கு சென்ற நிலையில் அவரது மகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்களின் இறுதி நடவடிக்கைகள் எதிர்வரும் 27ஆம் திகதி மில்டனில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.