கங்கை நதியில் டால்பினை கோடாரியால் அடித்துக் கொன்ற மூவர்! சமூகவலைத்தளத்தால் சிக்கினர்
கங்கை நதியில் வாழும் அரிய வகை உயிரினமான டால்பின் மீனை அடித்துக் கொன்ற மூவரை பொலிஸார் கைது செய்தனர்.
அரிய வகை மீனாக உள்ள இந்த டால்பின் மீன் கங்கை நதியில் வாழும் பாதுகாக்கப்பட்ட அரிய வகை உயிரினங்கள் பட்டியலில் உள்ளது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் கால்வாய் வழியே ஒரு டால்பினை வடநாட்டு இளைஞர் சிலர் இரும்புகம்பிகளாலும், கோடாரியாலும் வெட்டி கொன்றனர்.
இதை அந்த குழுவில் இருந்தவர்கள் சிலர் வீடியோவாக எடுத்து வலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேவேளை ஆற்று டால்பின் வகை மீன்களை கடந்த 2009ஆம் ஆண்டு தேசிய நீர் விலங்காக இந்திய அரசு அறிவித்தது நினைவுகூரத்தக்கது.