மத்திய லண்டனில் கத்திக்குத்து ; ஹீரோவான கடை ஊழியர்
மத்திய லண்டனில் கத்திக்குத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகவும் இதில் 11 வயது சிறுமியும் 34 வயது பெண்ணொருவரும் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் கடையில் வேலை செய்யும் ஊழியரின் துணிச்சலான செயலுக்கு பாராட்டு குவிந்து வருகின்றது.
தாக்குதலை முறியடித்த கடை ஊழியர்
அலறல் சத்தம் கேட்டது,நான் அந்த நபர் மீது பாய்ந்து தாக்கினேன் அவரது கத்தி தூரப்போய் விழுந்தது என தாக்குதலை முறியடித்த கடை ஊழியர் தெரிவித்துள்ளார்.
அங்குள்ள டீக்கடையில் பணிபுரியும் 29 வயதான அப்துல்லா எனும் இளைஞரே ஹீரோவாக மாறி சிறுமியையும் , பெண்ணையும் ஆபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளார்.
லண்டனின் லெய்செஸ்டர் சதுக்கத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தெரிவித்துள்ளனர்.
சிறுமிக்கு மருத்துவசிகிச்சை தேவைப்பட்டது ஆனால் அவருக்கு உயிராபத்து இல்லை என தெரிவித்துள்ள பொலிஸார், 34 வயது பெண்ணிற்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளனர்.
இது பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட சம்பவம் என தெரிவிப்பதற்கு எதுவும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்