லண்டலில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்ச்சியில் கத்திக்குத்து சம்பவம்!
பிரித்தானிய தலைநகர் லண்டனில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த விழாவில் ஏராளமான இந்தியர்கள் கலந்து கொண்டனர். அப்போது 25 வயது மதிக்கத்தக்க சீக்கிய இளைஞர் ஒருவர் திடீரென அங்கு வந்திருந்தவர்களை கத்தியால் குத்த ஆரம்பித்தார்.
இதனால் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். இருப்பினும் குறித்த சம்பவத்தில் 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சுதந்திர தின நிகழ்ச்சியின்போது மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்க முயற்சிப்பதும், பொதுமக்கள் கலைந்து ஓடுவதும் போன்ற காட்சிகள் அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது தொடர்பில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பொலிஸாரின் முதல்கட்ட விசாரணையில் அவர் காலிஸ்தான் ஆதரவாளரான குர்ப்ரீத் சிங் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.