மாணவனோடு பேரம் பேசிய எலன் மஸ்க்...என்ன நடந்தது?
உலகின் மிக முக்கியமான கோடீஸ்வரர்களில் ஒருவர் தான் எலான் மஸ்க்.
இவர் தற்போது தொழில்நுட்ப துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார். இந்த நிலையில் இவ்வளவு பெரிய நபரை மாணவன் ஒருவர் மிரட்டியுள்ளார்.
அப்படி என்ன நடந்தது என பார்த்தல்,
அந்த மாணவன் எலான் மஸ்க் எங்கு செல்கிறார், எந்த விமானத்தில் செல்கிறார், எவ்வளவு தூரம் செல்கிறார் உள்ளிட்ட அவரைக் குறித்த தகவல்களை அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக், ஸ்வீனி ( 19) இளைஞர் தனது எலான் மஸ்க் என்ற டுவிட்டர் ஐடியில் வெளியிட்டு வந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த எலான் மஸ்க் இந்த பதிவினை அழிக்க 500 டொலர் தருவதாக கூறியுள்ளார், ஆனால் அந்த மாணவனோ 50 ஆயிரம் டொலர் கேட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து எலான் மஸ்க் அவரை பிளாக் செய்துவிட்டார்.