கடுமையாக்கப்படும் மாணவர் விசா!
அவுஸ்திரேலியாவில், சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் குறைந்த திறன் உடைய பணியாளர்களுக்கான, 'விசா' வழங்கும் விதிமுறைகளை கடுமையாக்க, அந்நாடு முடிவு செய்துள்ளது.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமையால் அந்நாட்டு உள்கட்டமைப்பு வசதிகளில் பல சிக்கல்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.
கடந்த, 2022 - 23ம் ஆண்டு, ஐந்து லட்சத்து 10 ஆயிரம் பேர் அவுஸ்திரேலியாவில் குடியேறியதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
இதை தொடர்ந்து, வெளிநாட்டினரின் குடியேற்றத்தை குறைக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அமைச்சரின் கருத்து
அவுஸ்திரேலியாவில், வெளிநாட்டினர் குடியேறுவதை கணிசமாக குறைக்க பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.அது சிறப்பான பலன்களை அளித்து வருகிறது.
கடந்த 2022 - 23ல் குடியேற்ற எண்ணிக்கை கடுமையாக அதிகரித்ததற்கு வெளிநாட்டு மாணவர்களின் வருகையே காரணமாக அமைந்துள்ளது.
எனவே, மாணவர்களுக்கான தேர்வில் ஆங்கில பாடத்தின் தகுதி மதிப்பெண்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திறன் குறைந்த பணியாளர்களின் விசா விதிமுறைகளையும் கடுமையாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளார் ஓ நெய்ல் குறிப்பிட்டுள்ளார்.