நாடாமன்றத்தை பார்வையிட வருகை தந்த மாணவர்கள்
நாடாளுமன்றத்தை பார்வையிடுவதற்காக அதிகளவான மாணவர்கள் நேற்றைய தினம் வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் நாரதவிய ரீதியில் இருந்து 32 பாடசாலைகளை சேர்ந்த ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நாடாளுமன்றத்தை பார்வையிடுவதற்காக நேற்று வருகை தந்துள்ளனர்.
உலக நாடாளுமன்றத்தை ஒப்பிடுகையில் ஒரே நாளில் இத்தனை மாணவர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தமை சாதனையாக அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2019 முதல் கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பொதுமக்கள் கலரியானது, கடந்த செப்டம்பர் 19ஆம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்காக திறக்கப்பட்டது.
மேலும் எமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 25,000 மேற்பட்ட மாணவர்கள் இதுவரை நடந்த நாடாளுமன்ற விவாதங்களை காண வந்துள்ளனர்.
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஒரு குவளை பால் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம், எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.