ரஷ்ய அதிபரின் ஆலோசகர் எடுத்த திடீர் முடிவு
ரஷ்ய அதிபர் புடினின்(Vladimir Putin) ஆலோசகரான அன்டோலி சுபைஸ் (Andoly Subais) தனது பதவியை ராஜினாமா செய்து,ரஷ்யாவிலிருந்தும் வெளியேறியுள்ளார்.
அனடோலி சுபைஸ்(Andoly Subais), 1990-களில் ரஷ்யாவின் பொருளாதார சீர்திருத்தங்களை கட்டமைத்தவர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர்.
1990-களில் ரஷ்யா தனியார்மயமாக்குதலை ஊக்குவித்த போது சுபைஸ் அதை பார்த்து செதுக்கி கட்டமைத்தார்.
புடினின் (Vladimir Putin)வளர்ச்சியை ஆதரித்தவர் சுபைஸ்(Andoly Subais). கடந்த வாரம் தனது சகாவும் பொருளாதார நிபுணருமான யெகோர் கைடார்(Yegor Gaidar) மறைவை ஒட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவிட்ட சுபைஸ், என்னைவிட ரஷ்யா எதிர்கொண்டுள்ள ஆபத்துக்களை சரியாக கணித்தவர் என்று பதிவிட்டிருந்தார்.
ரஷ்ய தாக்குதல் தொடங்கியதிலிருந்தே தனது நடவடிக்கை மீதான உள்நாட்டு விமர்சனங்களை ரஷ்யா அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது.
அண்மையில் மக்கள் முன்னிலையில் பேசிய ரஷ்ய அதிபர் புடின்(Vladimir Putin), ராணுவ நடவடிக்கையை விமர்சிப்பவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என கூறினார்.
இந்நிலையில் தான் ரஷ்ய அதிபர் புடினின்(Vladimir Putin) ஆலோசகரான அனடோலி சுபைஸ் (Andoly Subais) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதன்படி கடந்த வாரம் அர்காடி டிவோர்கோவிச்(Arkady Dvorkovich) என்ற பொருளாதார மேதையும் ரஷ்யாவுக்கான ஆலோசனக் குழுவில் இருந்து விலகினார்.