ஈரான் போரால் கனடாவில் பெட்ரோல், டீசல் திடீர் விலை உயர்வு
ஈரான் போரால், கனடாவில் பெட்ரோல், டீசல் விலை திடீரென உயர்ந்துள்ள விடயம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கனடாவின் நோவா ஸ்கொஷியா மாகாணத்திலுள்ள ஹாலிஃபாக்ஸில் பெட்ரோல் விலை லிற்றருக்கு 7.1 செண்ட்கள் அதிகரித்து 182.9 செண்ட்களாக உயர்ந்துள்ளது.

டீசல் விலையும், லிற்றருக்கு 10.9 செண்ட்கள் அதிகரித்து, 246.7 செண்ட்களாகியுள்ளது.
பிரின்ஸ் எட்வர்ட் தீவில், பெட்ரோல் விலை லிற்றருக்கு 8.2 செண்ட்கள் அதிகரித்து 194.8 செண்ட்களாக உயர்ந்துள்ளது.
டீசல் விலையும், லிற்றருக்கு 13.8 செண்ட்கள் அதிகரித்து, 256.3 செண்ட்களாகியுள்ளது.
ஒரே இரவில் இப்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை திடீரென உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள நிலையில், ஈரான் போர் இப்போதைக்கு முடிவுக்கு வருமா என்பது தெரியவில்லை.
ஆக, இப்படியே போர் நீடித்துக்கொண்டே செல்லுமானால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயமும் உள்ளதை மறுப்பதற்கில்லை.
இதற்கிடையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மற்றும் அதனால் உருவாகியுள்ள பாதிப்புகள், பல மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.