பிரித்தானிய உள்துறை மந்திரி பொறுப்பில் இருந்து இந்திய வம்சாவளி சுயெல்லா நீக்கம்!
பிரித்தானிய உள்துறை மந்திரி பொறுப்பில் இருந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் கடந்த வாரம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை பொலிஸார் கையாண்ட விதம் தொடர்பில் உள்துறை மந்திரி சுயெல்லா பிரேவர்மேன் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பலரும் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதனால் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில், பிரித்தானிய அமைச்சரவையில் இருந்து சுயெல்லா பிரேவர்மேனை பதவி நீக்கம் செய்து ரிஷி சுனக் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சுயெல்லா பிரேவர்மேன் கடந்த 2022 அக்டோபர் மாதம் முதல் இங்கிலாந்து உள்துறை மந்திரியாக பதவி வகித்து வந்தார்.