கனடாவில் சாக்லேட் களவாடியவரை தேடும் பொலிஸார்
கனடாவின் ஸ்க்யூக்கில் சாக்லேட் களவாடிய ஓருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
ஒன்டாரியோ மாகாணம் ஸ்க்யூக்கில் உள்ள ஒரு உணவகத்தில் சாக்லேட் பாக்கெட்டுகள் திருடப்பட்டுள்ளது.
அந்த சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பெப்பர் ஸ்ப்ரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக டர்ஹம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நவம்பர் 6 ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் பணம் செலுத்தாமல் ஆறு சாக்லேட் பெட்டிகளை நீல நிற டஃபிள் பையில் வைத்து கடையை விட்டு வெளியேற முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் அவரை தடுக்க முயன்ற பாதுகாப்பு அதிகாரியிடம், அந்த நபர் பெப்பர் ஸ்ப்ரே பயன்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது.
தாக்குதலுக்குப் பிறகு, அவர் கருப்பு நிற வாகனத்தில் தப்பிச் சென்றார் என தெரிவிக்கப்படுகின்றது.
திருடப்பட்ட சாக்லேட் பாக்கெட்டுகளின் மதிப்பு சுமார் 400 டாலர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
பெப்பர் ஸ்ப்ரே தாக்குதலால் காயமடைந்த பாதுகாப்பு அதிகாரி சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சந்தேக நபர் பற்றிய தகவல்களை பொலிஸாருக்கு வழங்கி உதவுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.