இந்திய பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்’ விருதை வழங்கி அந்நாட்டின் இளவரசி விக்டோரியா கவுரவித்தார். இந்திய பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதில் முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றபின்னர் அங்கிருந்து நெதர்லாந்து சென்றிருந்தார். இந்நிலையில், இந்த பயணத்தில் மூன்றாவது நாடாக ஸ்வீடனுக்கு அவர் நேற்று சென்றார்.

இந்தியா மற்றும் ஸ்வீடன், ஜனநாயகத்துக்கு மதிப்பளிப்பதன் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதுவே இருதரப்புக்கும் இடையிலான பொருளாதார கூட்டுறவுக்கு வாய்ப்பளிக்கிறது” என்று ஸ்வீடன் நாட்டு நிறுவனங்களின் சிஇஓ-க்கள் உடனான சந்திப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியிருந்தார்.
அதோடு அந்நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார். அப்போது இந்தியா கண்டு வரும் பொருளாதார வளர்ச்சியை அவர் குறிப்பிட்டிருந்தார்.
அந்நாட்டு பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் உடன் இருதரப்பு உறவுகள் குறித்தும் ஆலோசித்தார். இந்நிலையில் இரு தரப்புக்கு இடையே சிறப்பான உறவுக்காக பிரதமர் மோடி அளித்த பங்களிப்பு, அவரது தலைமை பண்பினை அங்கீகரிக்கும் வகையில் ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார், கமாண்டர் கிராண்ட் கிராஸ்’ விருதை இளவரசி விக்டோரியா வழங்கி கவுரவித்தார் .
அதேவேளை . சர்வதேச அளவில் பிரதமர் மோடிக்கு கிடைத்த 31-வது கவுரவ விருதாக இது அமைந்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் கதெரிவித்துள்ளன.