இறுதிப் போட்டியில் வெற்றியை தழுவிய இந்திய அணி!
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 6 ஓட்டங்களால் வெற்றுப்பெற்றுள்ளது.
பெங்களூரில் நேற்று (03.12.2023) நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் ஷ்ரேயஸ் ஐயர் அதிகபட்சமாக 53 ஓட்டங்களையும், அக்சர் பட்டேல் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் மற்றும் பென் டர்சுயிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்ற நிலையில் தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பென் மெக்டெர்மாட் அதிகபட்சமாக 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி 5 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை நான்கிற்கு ஒன்று என்ற அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.