ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த கடினமாக இருக்கிறது; புலம்பும் ட்ரம்ப்
அரசியல்வாதிகள் மீண்டும் மீண்டும் எதிர்மறையாகக் குறை கூறிக்கொண்டே இருக்கும்போது ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த கடினமாக இருக்கிறது'' என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.
ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீட்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் குறித்து விரைவில் முடிவெடுப்பதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரான் உண்மையிலேயே ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது. அது அமெரிக்காவிற்கும் நம்முடன் இருப்பவர்களுக்கும் ஒரு நல்ல ஒப்பந்தமாக இருக்கும்.
இந்த மோதலைச் சுற்றியுள்ள அனைத்து அரசியல் கருத்துகளாலும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தனக்குக் கடினமாக இருக்கிறது. நான் வேகமாகச் செயல்பட வேண்டும். போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் அல்லது போரை நிறுத்த வேண்டும். வேறு எதையாவது செய்ய வேண்டும்.
இதற்கு முன் கண்டிராத அளவில் அரசியல்வாதிகள் மீண்டும் மீண்டும் எதிர்மறையாகக் குறை கூறிக்கொண்டே இருக்கும்போது, எனது வேலையைச் சரியாகச் செய்வதும் பேச்சுவார்த்தை நடத்துவதும் எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது.
இறுதியில் எல்லாம் நல்லபடியாகவே முடியும், எப்போதுமே அப்படித்தான் நடக்கும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.