கிண்டல் செய்யப்பட்ட கிறுக்கல்கள் அமெரிக்காவில் மில்லியன் டாலர்களுக்கு விற்பனை!
உலகப் புகழ்பெற்ற ஓவியர், பப்லோ பிக்காசோ (Pablo Picasso) வரைந்த ஓவியங்களுக்கு, இன்றும் மதிப்பு இருக்கிறது.
அந்தவகையில் சமீபத்தில், அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில், இவருடைய, 11 ஓவியங்கள், 824 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
ஏலம் விடப்பட்ட இந்த ஓவியங்கள் 1938ல் வரைந்த ஓவியங்கள் ஆகும். 'வுமன் இன் எ ஆரஞ்சு பெறாட்' - 1959ல் வரைந்த, 'மேன் அன்டு சைல்டு' - 1942ல் வரைந்த, 'ஸ்டில் லைப் வித் ப்ரூட் பாஸ்கெட் அண்டு பிளவர்ஸ்' போன்ற ஓவியங்களை ஏலத்தில் வாங்க, உலகின் பல நாடுகளிலிருந்தும் பலர் வந்தனர்.
இந்த படைப்புகள் வரையப்பட்டபோது இந்தளவுக்கு மதிப்பும், விலையும் இருந்ததில்லை. அன்று, அவருடைய மாடர்ன் ஆர்ட் ஓவியங்களை பலர் கிண்டல் செய்தனர். ஆனால், இன்று நிலைமை மாறி விட்டது; அவர் கிறுக்கல்கள் தான் கோடிகளுக்கு விற்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

