கனடாவில் பள்ளிக்கூட நுழைவாயிலில் மாணவி மீது கத்தி குத்து
கனடாவின் மான்ட்ரீயலில் உள்ள செயிண்ட்-லூக் உயர்நிலைப் பள்ளி நுழைவாயிலருகே ஒரு 14 வயது மாணவி கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
மான்ட்ரீயல் பொலிஸார் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை 8.50 மணியளவில், வகுப்புகள் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, நோட்ரே டேம் டி கிரேஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சிறுவன் கைது
காவல்துறைக்கு பல 911 அவசர அழைப்புகள் வந்ததையடுத்து பொலிஸார் விரைவாக சம்பவ இடத்துக்கு சென்றனர். சிறுமி கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்துள்ளார்.
மேலும், அவரது கண் கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த சம்பவம் குறித்த விசாரணைகளின் அடிப்படையில் 17 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த சிறுவன் இளைஞர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட சிறுவனும் பாதிக்கப்பட்ட சிறுமியும் இருவரும் சிறுவயதினர் என்பதால், அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.