ஜெர்மனியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்... காயமடைந்த இந்தியர்கள் தொடர்பில் வெளியான தகவல்
ஜெர்மனியில் உள்ள மக்திபர்க் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்ட சந்தையில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க குவிந்த போது அதிவேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
விபத்து ஏற்படுத்திய நபர் சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயதான டாக்டர் என தெரிய வந்தது. அவரை பொலிஸார் கைது விசாரணை நாடத்தியதில் பயங்கரவாத தாக்குதல் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில், இந்தியர்கள் 7 பேர் காயமடைந்த நிலையில் அவர்களை சிகிச்சைக்கு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இதனையடுத்து, அவர்களில் 3 இந்தியர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மற்ற 4 பேரும் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
இதனை பெர்லின் நகரில் உள்ள இந்திய தூதரகம், அதனுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது.