உக்ரைனுக்கு கடல் அரசனை நன்கொடையாக வழங்கிய பிரிட்டன் அரசு!
ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் விரும்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி உக்ரைன் மீது போரை தொடங்கியது.
தற்பொழுது 11 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இப்போரில், உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ஆயுதங்களை வழங்கியும் உதவி வருகின்றது.
இந்நிலையில் தேடுதல் மற்றும் மீட்பு பணிக்காக பிரிட்டன் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட கடல் அரசன் என்று அழைக்கப்படும் ஹெலிகாப்டரை உக்ரைனுக்கு பிரிட்டன் அரசு நன்கொடையாக வழங்கியுள்ளது.
பிரிட்டனின் இந்த உதவிக்கு உக்ரைன் பாதுகாப்பு துறை அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் கருங்கடல் அருகே ஹெலிகாப்டர் பறக்கும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து, இது கப்பற்படைக்கு மிகவும் வலு சேர்க்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த நவம்பர் மாதம் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் பெண் வலாஸ் உக்ரைனுக்கு ஹெலிகாப்டர்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.