ரஷ்யாவில் நாளுக்கு நாளுக்கு நாள் வேகமாக அதிகரிக்கும் உயிரிழப்புகள்!
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 33,860 பேர் பாதிக்கப்பட்டதோடு 1,209 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் இதுவரை மொத்தமாக 96இலட்சத்து 4 ஆயிரத்து 233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2 இலட்சத்து 73ஆயிரத்து 964 பேர் மரணமடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 10 இலட்சத்து 34ஆயிரத்து 458 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 2,300 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரஷ்யாவில் 27,700 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 82 இலட்சத்து 95 ஆயிரத்து 811 பேர் குணமடைந்துள்ளனர்.