எண்டோஸ்கோபியில் கண்ட காட்சி; அதிர்ச்சி அடைந்த மருத்துவர்!
ஜோத்பூரில் நோயாளி ஒருவருக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் அவருடைய வயிற்றில் இருந்து 63 நாணயங்களை ஒரு மருத்துவர் வெளியே எடுத்ததாக கூறப்படுகின்றது.
தீவிரமான வயிற்று வலி என்று ஒரு நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூரில் உள்ள MDH மருத்துவமனையில் அட்மிட் ஆன நோயாளியின் வயிற்று வலிக்கான காரணம், அவருடைய டிப்ரஷன் என கூறப்படுகின்றது.
அதாவது அவர் தீவிரமான மன சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளதால், நாணயங்களை விழுங்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
காஸ்ட்ரோ-எண்டராலாஜி துரையின் தலைவரான மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் இதைப் பற்றி கூறுகையில் "நோயாளியின் வயிறு நாணயங்களால் குவிந்துள்ளதாகவும் அவரை பரிசோதிக்கும் போது10 தொடக்கம் 15 நாணயங்கள் தான் விழுங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.".தெரிவித்தார்.
மினிமலி இன்வேசிவ் சர்ஜரி என்று கூறப்படும் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை மூலம், ஒவ்வொரு நாணயமாக மருத்துவர் வெளியே எடுத்துள்ளார். மொத்தமாக நோயாளியின் இருந்த நாணயங்களின் எண்ணிக்கை 63.
ஒரு மருத்துவக் குழுவை நியமித்து, இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்கள். இந்த சிகிச்சை முழுவதுமாக முடிய 2 நாட்கள் ஆனது என்று கூறப்படுகிறது.
தீவரமான மண நோயால் பாதிக்கப்பட்ட நபர் தற்போது உடல் ரீதியாக முன்னேற்றம் பெற்றுள்ளதாகவும், அவரை வெளியேற்றம் செய்து விட்டதாகவும், அவரது மன நல ஆரோக்கியம் மேம்பட உளவியலாளர் சிகிச்சை பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளார்கள்.