பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்திய நபருக்கு நேர்ந்த கதி!
பிரான்ஸில் தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேதப்படுத்தி , எரியூட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Lieusaint (Seine-et-Marne) நகரைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை இரவு Saint Fargeau-Ponthierry நகரில் உள்ள Total எரிபொருள் நிரப்பு நிலையத்தினை ஒருவர் பெற்றோல் ஊற்றி எரியூட்டியிருந்ததாக கைது செய்யப்பட்டிருந்தார்.
அங்கு இருந்த எரிபொருள் விநியோக இயந்திரத்தையும், பல்வேறு எரிவாயு குடுவைகளையும் அவர் எரியூட்டியிருந்தார்.
பின்னர் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், குறித்த நபரைக் கைது செய்தனர். அதன் பின்னர் விசாரணைகளிள் குறித்த நபர் இதற்கு முன்னர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
முன்னதாக அவர், Meaux நகரில் உள்ள அமெரிக்க யுத்த அருங்காட்சியகத்தினை சேதப்படுத்தியிருந்தார். Lieusaint நகரில் உள்ள தேவாலயம் ஒன்றினை சேதப்படுத்தியுள்ளார்.
அத்தோடு Melun நகரில் உள்ள Crédit Mutuelle நினைவுச் சின்னத்தையும் அவர் சேதமாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.