அகதியாக வந்து அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுத்துறை மந்திரி இன்று காலமானார்!
அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றிய மேடலின் ஆல்பிரைட் (Madeleine Albright) காலமானார்.
அகதியாக வந்து அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுத்துறை மந்திரியான மேடலின் ஆல்பிரைட் (Madeleine Albright) புற்றுநோயால் 84 வயதில் இன்று காலமானார்.
1937 ஆம் ஆண்டு செக்கோஸ்லோவாக்கியாவில் பிறந்த மேடலின் ஆல்பிரைட்(Madeleine Albright) ,1948 ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு அகதியாக வந்து சேர்ந்தார்.
அதன்பின்னர் இவர் 1957 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
மேலும் ஜனநாயகக் கட்சியின் செனட்டர் எட்மண்ட் மஸ்கியிடம் (Senator Edmund Muskie) பணிபுரிந்தார்.
அதன்பிறகு இவர் 1996 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டனால் (Bill Clinton) வெளியுறவுத்துறை மந்திரியாக நியமனம் செய்யப்பட்டார்.
அதன் மூலம் அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுத்துறை மந்திரி என்னும் பெருமையை இவர் பெற்றார். 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை இவர் அந்த பதவியை வகித்து வந்தார்.
அமெரிக்காவின் உயரிய விருதான சுதந்திர பதக்கத்தை மேடலினுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் பாரக் ஒபாமா (Barack Obama) வழங்கி கவுரவித்தார்.
மேடலின்(Madeleine Albright) சமீபகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் தற்போது அவர் உயிரிழந்துள்ளார்.