மீண்டும் அர்ஜெண்டினாவிற்கு கொண்டுவரப்பட்ட கொலைகார விமானம்
அர்ஜெண்டினாவில் ராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை உயிரோடு கடலில் வீசுவதற்காக பயன்படுத்தப்பட்ட கொலைகார விமானம் அமெரிக்காவிலிருந்து அர்ஜெண்டினாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
1976 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை அர்ஜெண்டினாவில் ராணுவ ஆட்சி நடைபெற்றது.
கொலைகார விமானம்
அக்காலப்பகுதியில் ராணுவத்தை விமர்சித்ததால் கைது செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் விமானத்திலிருந்து கடலில் வீசி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்போது இந்த விமானம் 30,000 பேரை உயிரோடு கடலில் வீச விமானம் பயன்படுத்தப்பட்டதாக தகவல் கூறுகின்றது.
கொலைகார விமானம் என அழைக்கப்பட்ட அந்த விமானம், அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வைத்த கோரிக்கைக்கு அமைய அர்ஜெண்டினாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் புயனோஸ் ஐரெஸில் உள்ள அருங்காட்சியகத்தில் அந்த கொலைகார விமானம் காட்சிப்படுத்தப்பட உள்ளது.