நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பாலம் தற்போது மக்களின் பார்வைக்கு!
குரேஷியா நாட்டில் கோமர்னா என்ற பகுதியில் கடற்பரப்பின் மீது இரண்டரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சீனா அரசின் உதவியுடனும் அந்நாட்டு தொழில்நுட்பத்துடனும் 2018 ஆம் ஆண்டு பிரம்மாண்டமான பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின.
குரோஷிய வரலாற்றில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கொரோனா காலத்தில் தடைபட்ட பணிகள், தற்போது நிறைவடைந்ததைத் தொடர்ந்து தெற்கு கடலோரப் பகுதிகளை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் பிரம்மாண்டமான புதிய பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.
கோலாகலமாக நடைபெற்ற பாலத்தின் திறப்பு விழாவில், கலைநிகழ்ச்சிகளும் வண்ணமயமான வாணவேடிக்கையும் நடைபெற்றது. நாள் முழுவதும் கொண்டாட்டங்கள் நடந்தன, 250 ஓட்டப்பந்தய வீரர்கள் பாலத்தை கடந்தனர்.
குரோஷிய கொடிகளுடன் சிறிய படகுகள் ஆறு தூண்களுக்கு கீழே பயணம் மேற்கொண்டு மகிழ்ந்தனர்.