பிரான்ஸில் திருமணத்தை நிறுத்திய மேயர்!
பிரான்ஸில் நகரம் ஒன்றின் மேயர் ஒருவர் திருமண மண்டபத்திற்கு சென்றுக் கொண்டிருந்த தம்பதியின் திருமணத்தை நடுத்து நிறுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பறின் மாவட்டத்தில் திருமணம் செய்யவிருந்த தம்பதி நகரத்தின் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டினால் அவர்களின் திருமணத்தை அவர் இரத்து செய்துள்ளார்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டிமை, நகரத்தில் மக்களுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் துப்பாக்கி வேட்டுக்களின் சத்தம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அதனை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மேயர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு மேயருடன் வந்த விசாரணை பிரிவினர் திருமண மண்டபத்திற்குள் சென்று உடனடியாக 3 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெரிய வாகனங்களுடன் அதிக வேகமாக பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், வீதி குறியீடு மதிக்கப்படுவதில்லை எனவும் உள்ளூர் மக்கள் மற்றும் பொலிஸாரால் தனக்கு தகவல் அனுப்பப்பட்டதென மேயர் குறிப்பிட்டுள்ளார்.
விசேடமாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக சத்தம் கேட்டதெனவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென மேயர் குறிப்பிட்டுள்ளார். மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இந்த துப்பாக்கி சத்தம் கேட்டதாகவும் இதனால் மக்கள் அச்சமடைந்ததாகவும் மேயர் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் செயற்பட்ட இந்த தம்பதிக்கு தங்கள் திருமண சடங்குகளை செய்வதற்கு அனுமதிக்க கூடாதென தான் நினைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்களின் உயிருக்கு பாதிப்பு அல்லது அவர்களுக்கு தொல்லை கொடுக்காத வகையிலேயே எந்த ஒரு கொண்டாட்டங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துப்பாக்கி சூடு நடத்திய திருமண வாகனத்தில் பயணித்த 3 பேரே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரிடம் இருந்து துப்பாக்கியும் மீட்கப்பட்டதாக மேயர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.