பிரான்ஸில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான தகவல்!
பிரான்ஸில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருட ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
A பிரிவில் (Category A) பதிவு செய்துகொண்டு வேலை தேடுவோரின் எண்ணிக்கை தற்போது 2.996 மில்லியனாக உள்ளது.
அதன்படி ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 0.93 சதவீதம் அல்லது 28,000 பேரால் வீழ்ச்சியடைந்துள்ளது.
முன்னதாக கடந்த ஜனவரி மாதத்திலும் 3.6 சதவீதத்தினால் (114,000 பேரால்..) Category A பிரிவில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருந்தது.