அமெரிக்காவில் இரண்டாவது பெரிய பரிசு தொகையை வென்ற நபர்!
அமெரிக்காவில் அதிர்ஷ்டலாபச் சீட்டில் ஒருவர் 1.76 பில்லியன் டாலரை வென்றுள்ளார். வெற்றிபெற்ற சீட்டு கலிபோர்னியா மாநிலத்தில் விற்கப்பட்டதாக கூறாப்பட்டுகின்றது.
அமெரிக்க வரலாற்றில் அதுவே அதிர்ஷ்டக் குலுக்கில் வெல்லப்பட்ட 2ஆவது ஆகப் பெரிய தொகை என கூறப்படுகின்றது.
30 ஆண்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்றுக்கொள்ளலாம்
எனினும் வெற்றியாளரின் பெயர் விபரங்கள் வெளிடப்படவில்லை. அவர் வெற்றிப் பணத்தை 30 ஆண்டுக் காலக்கட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது ஒரே தொகையாகச் சுமார் 774 மில்லியன் டாலராகவும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நபர் பெற்ற அதிர்ஷ்ட லாப சீட்டின் விலையோ 2 டாலர் மட்டுமே. எனினும் அதில் வெற்றிபெறும் வாய்ப்போ 292.2 மில்லியனில் ஒன்றாகும்.
அதேவேளை அதிர்ஷ்டக் குலுக்கில் வெல்லப்பட்டுள்ள ஆகப் பெரிய தொகை 2.04 பில்லியன் டாலர்ஆகும். அந்தக் குலுக்கல் சென்ற ஆண்டு நவம்பரில் நடைபெற்ற நிலையில் அதில் வெற்றிபெற்ற சீட்டும் கலிபோர்னியாவில் வாங்கப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.