நாடொன்றில் தந்தையைக் கொலை செய்த மகன்!
சிங்கப்பூரில் தந்தையைக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர் மனநல மதிப்பீட்டிற்காக 3 வாரங்களுக்குத் தடுத்துவைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 வயது சைலஸ்நர் சியா ஜியெ காய் (Sylesnar Seah Jie Kai) நீதிமன்றத்தில் காணொளி மூலம் தோன்றினார்.
பொலிஸார் தொடக்கக்கட்ட விசாரணையில் மேல் விவரங்களைச் சேர்த்திருப்பதாகவும் அடுத்து மனநல மதிப்பீட்டிற்காக சியா தடுத்து வைக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்க தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
அதற்கு சியாவின் வழக்கறிஞர்கள் மறுப்புத் தெரிவிக்கவில்லை. சியா தனது 47 வயது தந்தையைக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டார்.
அந்தச் சம்பவம் அக்டோபர் 10ஆம் திகதி யீஷூன் அவெனியூ 4இல் நடந்ததாக நம்பப்படுகிறது.
நேற்று முன்தினம் சியா தனது குடும்பத்தைச் சந்தித்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
இதன்போது சியாவின் வழக்கு விசாரணை நவம்பர் 9ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.