ஆப்கானிஸ்தானில் இன்னும் 439 அமெரிக்கர்கள் உள்ளனர்! அமெரிக்க அரசு தகவல்
சமீபத்தில் ஆப்கானிஸ்தானை தலிபான் படையினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டில் இருந்த அமெரிக்கப் படைகள் முழுவதுவாக அங்கிருந்து வெளியேறியது.
அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் உள்நாட்டுப் போரில் பங்கேற்கும் அமெரிக்க அரசின் நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இன்னும் 439 அமெரிக்கர்கள் தங்கியுள்ளதாகவும், அவர்களில் 363 தொடர்பில் உள்ளதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
அவர்களில் 176 பேர் மட்டுமே அமெரிக்கா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இத்தகவலை அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறை செயலர் கோலின் கஹ்ல் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களை மீட்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.